Friday 20 July 2012

சூர்ய க்ரியா - சூர்ய நமஸ்காரம்

‘ஹ’ என்றால் சூரியன், ‘ட’ என்றால் சந்திரன். சூரியனும், சந்திரனும் இல்லாமல் ஹடயோகா இல்லை. சூரிய நமஸ்காரத்தைப் போலவே இருக்கும் சூரியன் சம்பந்தப்பட்ட ஒருவகையான பயிற்சி ‘சூரியக் கிரியா’. அதில் குறிப்பிட்ட வகையான சுவாசமும், சக்தியை ஆற்றல் மிக்க வழியில் தூண்டுவதும் நிகழும். சூரிய நமஸ்காரத்தில் இருக்கும் ஆசனங்களை நீங்கள் ஒரு வகையில் செய்தால் அவை தயார்படுத்தும் தன்மை உடையவை அல்லது இன்னொரு வகையில் செய்தால் ஈட, பிங்கல நாடிகள் * இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்தக் கூடியவை. பெரும்பாலும் இது சூரிய நமஸ்காரம் என்றே அழைக்கப்படுகிறது, ஏனென்றால் அது முக்கியமாக சோலார் ப்ளக்ஸைத்(நெஞ்சுக் குழிப் பகுதி) தூண்டுகிறது. ‘சமத் ப்ராணா’ அல்லது உடலில் இருக்கும் சூரிய வெப்பத்தை இந்தப் பயிற்சி  உயர்த்துகிறது. ‘சூரியன்’ என்று நாம் சொல்வதை வெறும் ஒரு குறியீடாக மட்டும் சொல்லவில்லை. இந்த பூமியில் நீங்கள் உணரும் அத்தனை வெப்பமும் அடிப்படையில் சூரியனிடமிருந்துதான் வருகிறது –அதுதான் சேமித்து வைக்கப்பட்டு, பல வழிகளிலும் வெளியிடப்படுகிறது. சூரிய வெப்பத்தினால் சுடப்படுவதால்தான் ஹைட்ரோ கார்பன்கள் உருவாகின்றன. ஒரு மரத்துண்டை எடுத்து நீங்கள் எரித்தால், அது சூரிய சக்தியைத்தான் வெளியிடுகிறது. சூரிய சக்தியை நீக்கிவிட்டால், ஒட்டுமொத்த பூமியும் பனிக்கட்டியாக உறைந்துவிடும்.

சூரிய சக்தியால்தான் எல்லாம் நடக்கின்றன. அணுவைப் பிளப்பது மட்டும் ஒரு விதிவிலக்காக இருக்கலாம். இந்த செயல் சூரியத் தன்மை உடையது அல்ல, அதனால்தான் அது அத்தனை திறன் மிக்கதாக, ஆபத்தானதாகக் கருதப்படுகிறது, ஏனென்றால், அணுவைப் பிளப்பதற்கு நீங்கள் இந்த பூமியின் பொதுவான சக்தி ஆதாரமான சூரியனைப் பயன்படுத்துவதில்லை. நம்முடைய உடல் அமைப்புகளில் கூட சூரியத் தன்மையைத்  தூண்டினால், அது  பிரகாசமாக ஒளிரத் துவங்குகிறது. மேலும் உங்கள் சுவாசப் பாதையில் மட்டுமல்லாமல், உடலின் பிற பாகங்கள்  மற்றும் அதிகப்படியான சளி போன்ற உங்களது குறிப்பிட்ட சில பிரச்சனைகள் நீங்கி உடல் சமநிலை அடைய முடியும்.
அனைத்துமே சூரிய சக்தியால்தான் இயங்குகின்றன. நாம் நிலக்கரி அல்லது எரிவாயுவிலிருந்து மின்சாரத்தை உருவாக்குவதாக நினைத்தாலும், அனைத்துமே உங்களுடைய உடல் ஆரோக்கியத்தைப் பற்றி மட்டுமல்லாமல் உங்களைப் பற்றிய நிறைய விஷயங்களையும் தீர்மானிக்கிறது. உங்களுக்குள் எத்தனை சூரிய சக்தி இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் உங்கள் உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம், ஆன்மீக வாய்ப்புகள் அனைத்தும் தீர்மானிக்கப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்கள் சுரப்பிகளின் சுரப்புகள் எத்தனை சமநிலையோடு இருக்கின்றன என்பதைப் பொறுத்து அவை தீர்மானிக்கப்படுகின்றன. உங்களது சுரப்பிகளின் சுரப்புகள் சற்றே சமநிலை தவறியிருந்தாலும், தியானத்தை விடுங்கள், வெறுமனே உட்கார்ந்து, கவனிப்பது கூட மிகவும் கடினமாகிவிடும். உடலின் ரசாயனங்கள் தாறுமாறாகிவிடுவதால், நீங்கள் பித்துபிடித்ததைப் போல உணர்வீர்கள். சுரப்பிகளில் சமநிலையைக் கொண்டு வருவதற்கு சூரிய நமஸ்காரம் மிக எளிமையான, மிகச் சிறப்பான சாதனாக்களில் ஒன்று.சூரிய நமஸ்காரம் செய்பவர்களுக்கு சுரப்பிகளின் சுரப்புகளும், சளியின் அளவும் மிகச் சுலபமாக சமநிலை அடைந்து, நல்ல நிலையில் இருக்கும்.
சூரியக் கிரியாவை பெரும்பான்மை மக்களுக்குக் கற்றுத் தரத் தீர்மானிக்கப்பட்டபோது, அது சூரிய நமஸ்காரமாக சுருங்கிவிட்டது. சூரியக் கிரியாவை பொதுமக்களில் பெரும்பான்மையினருக்குக் கற்றுக் கொடுக்க தீர்மானிக்கும்போது, அவர்கள் செய்வதை தொடர்ச்சியாக கண்காணிப்பதோ அல்லது தவறுகள் இருந்தால் திருத்துவதோ மிகவும் கடினம் என்பதால், அதிலிருக்கும் சக்தி வாய்ந்த அம்சங்களை எடுத்துவிட வேண்டியதாகி . ஏனென்றால் சக்தி வாய்ந்த அம்சங்களை மக்கள் தவறாகச் செய்யும் வாய்ப்பு இருக்கிறது. அப்படிச் செய்தால் அது கெடுதல் விளைவிக்கும். எனவே அதை சற்று நீக்கிச் செய்யும்போது, அதை அதிகமானவர்கள் பயன்படுத்த முடியும். பிறகு தொடர்ச்சியாகக் கண்காணிக்கத் தேவையில்லாமல் அதை அதிக எண்ணிக்கையில் கற்றுத் தர முடியும். அதனால் அது அதிகமாக நடைமுறைக்குச் சாத்தியமாகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் மக்கள் இதைச் செய்யும்போது, அதை சுலபமாக கண்காணிக்க முடியும்போது, அதை நாம் முற்றிலும் வித்தியாசமான வழியில் செய்ய முடியும்.
உங்கள் அமைப்புகளை இந்தப் பிரபஞ்சத்தின் வடிவத்துக்கு இசைவாக ஒழுங்குபடுத்துவதற்கு, நீங்கள் ஒரு சரியான வடிவம் பெறுவதற்கு ஹடயோகா ஒரு வழி. அப்போது நீங்கள் பிரபஞ்ச வடிவத்தின் பிரதிபிம்பம் ஆகிவிடுவீர்கள். இதை மிகவும் கவனமாகச் செய்ய வேண்டும். பிரபஞ்ச வடிவத்துக்கு வெகு தொலைவில் நீங்கள் இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கு நெருக்கமாக நீங்கள் செல்லும்போது, ஹடயோகாவை எப்படிச் செய்கிறீர்கள் என்பதில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். உங்கள் பயிற்சி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டுமானால், அதை துல்லியமாகச் செய்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில் அதிக கவனமாக இருக்க வேண்டும், இல்லையேல் வேறு பல விஷயங்கள் நடந்துவிடும். சூரியக் கிரியாவை எப்படிப் பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரிந்துவிட்டால், அது அளவில்லாத சாத்தியங்களை வழங்கும்.
உள்ளுக்குள் சூரிய சக்தியை தூண்டுவதற்காக, கிரியாக்களும், ஆசனங்களும் பல்வேறு பரிமாணங்களில், ஆதியோகியின் ( உலகின் முதல் குரு ) காலத்திலிருந்தே செய்து வரப்பட்டுள்ளன. ஆதியோகி, உடலின் சூரியனை தூண்டிவிடுவதற்காக பலவிதமான ஆசனங்களை, அதற்கான வழிமுறைகளை தானே கற்பித்திருக்கிறார். மஹாபாரதத்தில் கூட கிருஷ்ணர், சூரியனை வழிபட்டு வந்ததாக சொல்லப்பட்டுள்ளது. தினமும் காலையில் சூரியன் உதிக்கும்போது அவர் சூரியனுக்கு நன்றி செலுத்தி, அதனுடைய வழிகாட்டுதலை வேண்டி நிற்பதை ஒரு விசித்திரமான செய்முறை என்று யாரோ சொல்லியிருக்கிறார்கள். கிருஷ்ணரே ஒருவகையான சூரியக் கிரியாவை செய்து வந்தார். 
தற்காலத்தில் ஹடயோகா பல  விசித்திரமான வடிவங்களையெல்லாம் பெற்றுவிட்டது. பழங்காலத்தில் யோகா எப்படி இருந்ததோ அந்த வடிவத்துக்கே அதைக் கொண்டு வர வேண்டியது மிகவும் முக்கியம். எனவே நாம் செய்ய வேண்டிய இன்னொரு வேலையாக அது ஆகிவிட்டது. ஹட யோகாவை ஒருவருக்கு கற்றுத் தருவதற்கு மிகப் பெரிய முயற்சி தேவைப்படுகிறது. இது தன்னளவில் ஒரு முழுமையான ஆன்மீக செயல்பாடாக இருக்க முடியும். நீங்கள் இந்த ஒரு விஷயத்தை மட்டும் சரியாகச் செய்து வந்தால், அது போதும்.
*இடது, வலது சக்தித் தடங்கள்.

2 comments:

  1. Good Article... Do post about ancient way of doing surya kriya...

    ReplyDelete
  2. Anna, when time comes we will arrange it in our yoga hall itself one day.. we all gather and let it b taught.. these r yogic techniques in its purest forms.. so it needs keen monitoring by a guru.. thats y even surya kriya has been reduced to surya namaskar !! so till then we do surya namaskar regularly !!! Thanx for your comments !!

    ReplyDelete