இந்திய சமூகங்களில், கோவில்கள் எப்பொழுதுமே ஒரு முக்கிய பங்கை வகித்திருக்கின்றன. கல்வி, கலை மற்றும் கலாச்சார குவிப்பு மையங்களாக மட்டுமல்லாமல் மிகவும் சக்தி வாய்ந்த மையங்களாக செயல்பட்டுள்ளன. எனவே புராதனக் கோவில்கள் வழிபாட்டுக்காக அல்லாமல் சக்தியின் கருவறையாகவே அமைக்கப்பட்டன. விருப்பத்துடனும், ஏற்றுக் கொள்ளும் தன்மையுடனும் இருந்தால், ஒருவர், தன்னை மிகவும் ஆழமான வழிகளில் மாற்றிக் கொள்ள முடியும்.
இந்த கோயில்களின் வடிவமைப்பும் கட்டுமானமும் மிகவும் நுணுக்கமாகவும் சிக்கலான கணக்குகளுடனும் கட்டப்பட்டுள்ளன. இந்த கோவில்களின் அடிப்படை வடிவமைப்பானது, கோவில் பரிக்ரமா, கோவிலின் கர்ப்பக்கிருகம், கடவுளின் உருவச்சிலையில் உள்ள முத்ரா, பிரதிஷ்டைக்காக பயன்படுத்தப்பட்ட மந்திரங்கள் இவையனைத்தையும் பொறுத்து அமைகிறது.
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள உள் சக்திகளின் ஆழமான புரிந்து கொள்ளுதலை அடிப்படையாகக் கொண்டு, உள்நிலை மாற்றத்திற்கு உபயோகப்படும் மிகவும் சக்தி வாய்ந்த இடமாக, இந்த கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, தற்பொழுது கூட இந்திய கலாச்சாரங்களில் கோவிலுக்குள் சென்றால், சிறிதளவு நேரமாவது அமைதியாக உட்கார்ந்து விட்டு செல்வது என்பது வழக்கமாக உள்ளது. வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் கூட அவ்வளவு முக்கியமாக கருதப்படவில்லை. ஆனால் ஒருவர் சிறிது நேரமாவது கோயிலுக்குள் உட்காராமல் போய்விட்டால் அது பலனற்றதாக கருதப்பட்டது.
இது எதற்காக என்றால், கோயில்கள் எல்லாம் சக்தியை நிரப்பிக் கொள்ளும் இடங்களாகக் கட்டப்பட்டுள்ளன. அவ்வப்போது மக்கள் இங்கு வந்து தங்கள் உள்சக்தி நிலையை பெருக்கிக் கொள்ளலாம். மக்கள் தினமும் காலையில் தங்கள் வேலைகளை ஆரம்பிக்கும் முன் கோயிலுக்குச் செல்வார்கள். இதனால் தங்கள் வாழ்க்கையை அதிக சமநிலையுடனும், ஆழத்துடனும் அவர்கள் எதிர்கொள்ள முடியும்.
காலம் செல்ல செல்ல இந்த கோயில்களுக்குப் பின்னே உள்ள அறிவியலைப் புரிந்து கொள்ளாமல் வெறும் சடங்குகளையும், பாரம்பரியத்தையும் மட்டுமே பார்த்தார்கள். அதனால் தற்போது கோவில்கள் வெறும் பிரார்த்தனைக் கூடங்கள் ஆகிவிட்டன. இந்த ஆழமான விஞ்ஞானத்தைப் புரிந்து, இதைத் திரும்பவும் உயிர்ப்பிப்பது நமது கடமையும் பொறுப்புமாகும்.
No comments:
Post a Comment